
Immortal Review: ஃபேன்டஸி ஹாரருக்கான ஐடியா ஓகே! ஆனால் திரைக்கதையும் மேக்கிங்கும் கைகொடுக்கின்றனவா?
சென்னையில், தன் மாமாவின் (மாறன்) அச்சகத்தில் பணியாற்றும் மகி (ஜி.வி. பிரகாஷ் குமார்), தனக்காக ஒரு பேச்சுலர் வீடு தேடும் படலத்தில் இருக்கிறார். இந்நிலையில், சிந்து (கயாடு லோகர்) என்ற பெண்ணிடமிருந்து மகிக்கு அலைபேசி அழைப்பு வருகிறது. தன் வீட்டின் ஓர் அறையை ரூ.5000க்கு வாடகைக்கு விடவுள்ளதாகச் சொல்கிறா…


