பசறை – ஹிங்குருகடுவ பகுதியில், 15 வயதுடைய சிறுவன் ஒருவனைத் தனது நாற்றுமேடையில் தொழிலாளியாக அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிபிலேகம பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதல்கும்புர பிரதேச செயலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குடும்ப வறுமை காரணமாக ஏழாம் வகுப்புடன் கல்வியைக் கைவிட்ட இச்சிறுவன், நோயுற்ற தனது தாயாரைப் பராமரிப்பதற்காக வேலைக்குச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹிங்குருகடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.












Comments (0)
Be the first to share your thoughts.