நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், விநியோக நடவடிக்கைகள் வழமை போல் இடம்பெறுவதாகவும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.
தனியார் நிறுவனங்கள் சில தமக்கு ஏற்படும் நஷ்டத்தைக் கருத்திற்கொண்டு சில பகுதிகளில் எரிபொருள் விநியோகத்தைக் குறைத்துள்ளமையினாலேயே, குறிப்பிட்ட சில இடங்களில் வரிசைகள் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, செபெட்கோ நிரப்பு நிலையங்கள் இல்லாத 52 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவ்விடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்கத் தனியார் நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.












Comments (0)
Be the first to share your thoughts.