ஒரு மருத்துவர் சொன்ன கதை இது.ஒரு முதியவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவர் அனேகமாக உயிர் பிழைப்பது கடினம் என்பது மருத்துவர்களின் முடிவு.இது அவருக்கு அருகே நின்ற அவருடைய முதிய மனைவிக்கும் சொல்லப்பட்டது.அப்பொழுது மனைவி அந்த மருத்துவரிடம் கேட்டார்,”எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்.எனது கணவரை எனது மாவட்ட ஆஸ்பத்திரிக்கு மாற்றி விடுங்கள்”என்று.மருத்துவர் கேட்டார், ஏன் என்று. “அங்கிருந்து எனது கிராமம் கிட்டவாக இருக்கிறது.இவர் இறந்தால் இவர் உடலை அங்கே கொண்டுபோக செலவு குறைவாக இருக்கும். யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு போவது […]