செம்மணிப் புதைகுழி தொடர்பான பேராசிரியர்.ராஜ் சோமதேவவின் அறிக்கை இடைக்கால அறிக்கைதான். அது  இறுதி அறிக்கை அல்ல. மேலும் அந்த அறிக்கையில் பல இடங்களில் “இருக்கலாம்” என்றுதான் கூறப்பட்டிருக்கிறது.சில விடயங்களில் உரிய துறைசார் நிபுணத்துவ அறிவைப் பெற்றுக்கொண்டுதான் முடிவுக்கு வரலாம் என்பதும் கூறப்பட்டிருக்கிறது.எனவே அந்த அறிக்கையில் கூறப்பட்டவைகள் அனைத்தும் இறுதியானவை அல்ல.எனினும்,இனி வரக்கூடிய அறிக்கைகளிலும் முடிவுகளிலும் அது செல்வாக்குச்  செலுத்தும் என்பதும் உண்மை. அந்த அறிக்கையில் பிரதானமாக,எங்கே பேராசிரியர் பிசகுகிறார் என்றால், தொகையாக அவ்வளவு எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்ட […]