வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஆசிரியர் குழு
எழுதியவர்: ஆசிரியர் குழு
வெளியிடப்பட்டது: Jun 27, 2025, 08:00 PM IST
Join
வடக்கு காணிகளை கையகப்படுத்தும் வர்த்தமானியை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

வடக்கில் காணிகளை சுவீகரிக்கும் 28.03.2025 திகதியிடப்பட்ட 2430/25 இலக்கமிடப்பட்ட வர்த்தமானியை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தாக்கல் செய்த மனு, இன்று வெள்ளிக்கிழமை (27) விசாரிக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தமானியை தற்காலிகமாக வலிதற்றதாக்கும் வகையில் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அடுத்த வழக்கு விசாரணை, எதிர்வரும் ஜூலை மாதம் 02ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அதற்கிடையில் குறித்த வர்த்தமானியை மீளப் பெறுவதற்கான  வர்த்தமானியை அரசாங்கம் வெளியிட்டால், அதனை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

கூகுளில் News21 ஐ விருப்பமான ஆதாரமாக சேர்க்கவும் Add as a preferred source on Google
வடக்கில் காணி சுவீகரி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
ADVERTISEMENT
ADVERTISEMENT