பைஸர் முஸ்தபாவின் நிதியொதுக்கீட்டில் சமூக அபிவிருத்தி சங்கத்திற்கு உதவி
( ஐ. ஏ. காதிர் கான் )
பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவின் 2026 ஆம் ஆண்டிற்கான பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியொதுக்கீட்டின் கீழ், கொழும்பு – 13 ஜிந்துப்பிட்டி வட்டாரம், ஜிந்துப்பிட்டி வீதியில் அமைந்துள்ள 107 ஆம் தோட்டம் பிரதேச சமூக அபிவிருத்தி சங்கத்திற்கு கதிரைகள் மற்றும் கூடாரம் (Canopy) ஆகியன வழங்கும் நிகழ்வு, அண்மையில் கொழும்பு பிரதேச செயலக அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபாவின் அதிகாரிகள், பிரதேச செயலக அதிகாரிகள், சமூக அபிவிருத்தி சங்கத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட நலன் விரும்பிகள் பலரும் கலந்து கொண்டனர்.
( ஐ. ஏ. காதிர் கான் )












Comments (0)
Be the first to share your thoughts.