நுவரெலியா – மீப்பிலிமன பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர், மூடிய அறைக்குள் BBQ அடுப்பைப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட நச்சு வாயுவைச் சுவாசித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அவிசாவளையைச் சேர்ந்த இத்தம்பதியினர், நுவரெலியாவில் நிலவிய கடும் குளிரில் இருந்து தப்பிக்க, அறைக்குள் BBQ அடுப்பை எரியவிட்டு உறங்கியுள்ளனர். இதன்போது, அடுப்பிலிருந்து வெளியான கார்பன் மொனாக்சைடு வாயுவைச் சுவாசித்தமையே இவர்களின் உயிரிழப்புக்குக் காரணம் என நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.












Comments (0)
Be the first to share your thoughts.