பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரைக் கைது செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காகத் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதியரசர்களான மாயாதுன்ன கொரியா மற்றும் லக்மாலி கருணாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன், பொலிஸ் மா அதிபர் ஊடாக இந்தப் பிடியாணையை உடனடியாக நிறைவேற்றுமாறும் கட்டளையிட்டுள்ளது.












Comments (0)
Be the first to share your thoughts.