புத்தளம், கற்பிட்டி – தேத்தாபொள பகுதியில் ஆடைத் தொழிற்சாலை காணியிலுள்ள நீர் நிறைந்த பள்ளத்தில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேத்தாபொளையைச் சேர்ந்த வடிவேல் செந்தூர் (வயது 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொலையாளி தனது மனைவியுடன் முறைகேடான தொடர்பைப் பேணிவந்த ஆத்திரத்தில் இக்கொலையைச் செய்துள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸ் விசாரணைகளில் ஒப்புக்கொண்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மரப்பொல்லுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.












Comments (0)
Be the first to share your thoughts.