ஆறு கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய கூட்டு அல்லது அவர்களுடைய வார்த்தைகளில் சொன்னால், “இடையூடாட்டத் தளம்”அல்லது “மேடை ” தொடர்ச்சியாக சந்திப்புகளை முன்னெடுத்து வருகிறது. கடந்த வாரம் அவர்கள் முதலில் அரசுத் தலைவர் அனுரவை சந்தித்தார்கள்.அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர். அதன்பின் அடுத்த நாள் கொழும்பில் உள்ள இந்திய தூதுவர்.என்றிவ்வாறாக பல்வேறு தரப்பினர்களையும் அவர்கள் சந்தித்து வருகிறார்கள். மேலும் தமிழகத்திற்கும் அவர்கள் செல்ல இருப்பதாக அந்த ஆறு கட்சி தலைவர்களில் ஒருவராகிய ரபூப் ஹக்கீம்,அண்மையில் தமிழகத்துக்குச் சென்றபோது […]