நேற்று சாவகச்சேரியில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களும் அனுர அரசின் இரண்டு ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக,உண்ணாவிரதம் இருந்த அதே காலப்பகுதியில், சாவகச்சேரி மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகிய அர்ஜுனா,அனுராதபுரத்தில், ராஜபக்சக்களின் கூட்டத்தில் முன் வரிசையில் காணப்பட்டார். இந்த உண்ணாவிரதத்துக்கு அடுத்த நாள் அதாவது இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை யாழ்ப்பாணத்தில் ஒரு பேரணியை ஒழுங்குப்படுத்தி இருக்கிறது. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் […]