2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு!

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 24 பேருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பினை கொழும்பு மேல்நீதிமன்றத்தின் மூவரடங்கிய விசேட நீதிபதிகள் குழாம் வழங்கி வருகிறது.

சதி செய்தல் மற்றும் தாக்குதல்களுக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்டிருந்தன.

விசாரணைகளின் முடிவில், வழக்கில் சம்பந்தப்பட்ட 24 பேரில் 15 பேர் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள 9 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை  நீதி மன்றம் அறிவிக்க இருக்கின்றது.

The post 2019 ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: 15 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு! appeared first on Malayagam.lk.