பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு யார் ஆட்சியில் நடந்தது என்பது குறித்து ஆளும் தவெகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்திருக்கிறது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த முறைகேடு தொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அப்பதிவில், " கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட "பெரியார் அறிவுலகத்தில்" நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியுள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

மக்களின் சிந்தனையை மேம்படுத்தவும், அறிவுப் பசியைப் போக்கவும் பயன்பட வேண்டிய நூலகங்களில் கூட கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பது என்பது எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாதது. போலி பிம்பங்களை உருவாக்கி, ‘பொய்க்கால் குதிரை’ அரசை நடத்தி வரும் ரீல் முதல்வர் விஜய் அவர்கள் சமீபத்தில்தான் இந்த பெரியார் அறிவுலக கட்டிடத்தினை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோடு ஷோ நடத்துவதிலும், கேமராக்களுக்கு முன்னால் கையசைத்து ஆக்ஷன் செய்வதிலும் காட்டும் ஆர்வம், சிறிதளவாவது தான் திறந்து வைக்கும் நூலகத்தில் நூல்கள் சரியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா, அதற்கான உள்கட்டமைப்பு சரியாக உள்ளதா என்பதை ஆராய்வதில் இருந்திருக்க வேண்டாமா?
பெரியார் நூலக விவகாரம்: 'விசாரணைக்கு தயார்; திமுக ஆட்சியில் முறைகேடு நடைபெறவில்லை'- உதயநிதிசினிமா ஷூட்டிங் போல மேக்கப் போட்டு ரெடியாகி வந்து ரிப்பன் வெட்டி திறப்புவிழா நிகழ்ச்சியில் நடித்துவிட்டு போய்விட்டால் மட்டும் தன் கடமை முடிந்துவிட்டது என முதல்வர் நினைத்துக் கொண்டாரா என்ன? சென்ற ஆட்சியின் திட்டம் என்று இப்போது வாய்கிழிய பேசும் இதே ஆட்சியாளர்களின் வாய்கள், திறப்பு விழாவின் போது பேசிய பேச்சுகள் எல்லாம் நினைவிருக்கிறதா?
இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தி இவ்வளவு பேசும் இந்த அரசு, நூலகம் திறக்கும் முன் வந்த நூல்களை சரிபார்த்திருக்க வேண்டாமா? தங்கள் கொள்கைத் தலைவர் பெயரில் ஒரு நூலகம் நேரடியாக முதல்வரே திறந்தாலும் கூட , ஒரு குறைந்தபட்ச ஆய்வை கூட இந்த அரசு செய்யாமல் அக்கறை அற்று இருந்திருப்பதும் தவறு தானே! அதுமட்டுமல்லாமல், ஒருபுறம் தவறு செய்தது நாங்கள் இல்லை திமுகதான் என ஆளுங்கட்சியும்,மறுபுறம் தவறு செய்தது நாங்கள் இல்லை தவெகதான் என திமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டி மக்களை குழப்பி வருகின்றன.
தானும் குழம்பி, மக்களையும் குழப்பி, தமிழகத்தை ஒரு தொடர் குழப்பநிலைக்கு இவர்கள் தள்ளிவிட்டனர். இந்த குழப்பநிலை ஒன்றும் இந்த குழம்பி போன பொய்க்கால் குதிரை அரசுக்கு புதிதல்ல. ஒரு யூனிட் மின்சாரம் ₹20-க்கு வாங்குவது ஊழல் என்று அன்று சட்டமன்றத்தில் கூச்சலிட்ட அதே மின்சாரத் துறை அமைச்சர், இன்று ஒரு யூனிட் மின்சாரத்தை ₹40 வரை கொடுத்து கொள்முதல் செய்து மக்கள் வரிப் பணத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறார். இது ஊழல் இல்லையா? மக்களை ஏமாற்றும் பச்சைப்பொய் இல்லையா?
தார் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகம் என்று காரணம் கூறி, பொதுப்பணித்துறை அமைச்சர் அன்று டெண்டர்களை ரத்து செய்தார். ஆனால் அன்று ஒரு டன் ₹48,000-க்கு இருந்த தார் விலை இன்று ₹1,00,000-ஐ தொட்டு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. இன்று வரை புதிய டெண்டர்களும் விடப்படவில்லை, பணிகளும் நடக்கவில்லை. அப்படியென்றால் அன்று டெண்டரை ரத்து செய்ததால் யாருக்கு என்ன லாபம்? இது மக்களைக் குழப்பும் செயலில்லையா?
எனவே பெரியார் அறிவுலக ஊழல் விவகாரத்தில் தவெக அரசாக இருந்தாலும் சரி இல்லை முந்தைய திமுக அரசாக இருந்தாலும் சரி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு! எனவே ,பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல் குறித்து உடனடியாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைத்து, இந்த ஊழலில் தொடர்புடைய அனைவர் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பொய்க்கால் குதிரை அரசை அதிமு சார்பில் வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb












Comments (0)
Be the first to share your thoughts.